தான் ஆரி அர்ஜுனனுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் வெற்றி பெறுவார் என்றும் முன்னாள் பிக்பாஸ் பிரபலம் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் இந்தமுறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கடந்த வாரம் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 10 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு 8 பேர் களத்தில் உள்ளனர். இந்த வார நாமினேஷனில் கேபி, ஷிவானி, ரம்யா, சோம், ஆஜித் ஆகிய 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆஜித் இந்த வாரம் குறைந்த வாக்குகளைப் பெற்று 11-வது போட்டியாளராக வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் முழுக்க ஆரி - பாலாஜி இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து வார நேற்று போட்டியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் பாலாஜியின் தவறுகளை சுட்டிக்காட்டினார். அதேவேளையில் சக போட்டியாளர்கள் வைக்கும் சிறு சிறு விஷயங்களை திருத்திக் கொள்ளலாமே என்றும் ஆரிக்கு அட்வைஸ் வழங்கினார்.
ஆரி - பாலாஜி இருவரிடையேயான மோதலைப் பார்த்த பார்வையாளர்கள் சிலர் ஆரிக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் பாலாஜிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ரேஷ்மா தான் ஆரியுடன் இருப்பதாகவும், அவர் டைட்டிலை வெல்வார் என்றும் கூறியுள்ளார்.
ஆரம்பம் முதலே தனது தனித்துவமான குணாதிசயம், போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்டு அசத்தி வரும் நடிகர் ஆரிக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்