ஜெயம் ரவி, ஆர்த்தியின் புத்தாண்டு கொண்டாட்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாம் பிரபலங்களை நேரில் சென்று சந்திப்பது என்பது மிகவும் கடினமானது. எனவே தான் அவர்களை சமூக வலைதளங்களில் பின் தொடர்கிறோம். இதன் மூலம் அவர்களுடன் நேரடி தொடர்பில் உள்ள அனுபவத்தை சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற வலைதளங்கள் நமக்கு அளிக்கிறது.

புத்தாண்டை முன்னிட்டு அனைத்து பிரபலங்களும் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் புத்தாண்டை முன்னிட்டு புதிய திரைப்படங்களின் அறிவிப்பும் வெளியானது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி குடும்பத்துடன், கொண்டாடிய புகைப்படத்தை ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் ஜெயம் ரவியும், ஆர்த்தியும் ஒன்றாக இருக்கும் செல்ஃபிக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. இவரின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் எனக்கு மிகவும் பிடித்த ஜோடிகள் நீங்கள் தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் ஆர்த்தி தனது அம்மா, அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு ‘இந்த வாழ்க்கை மிகவும் அழகானது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்