அதிகம் பகிரப்பட்டு வருகின்றன குறிப்பாக சீனாவைச் சேர்ந்த அல்லது சீன நிறுவனங்களோடு கூட்டு வைத்துள்ள நிறுவனங்களுக்கு சொந்தமான ஆப்புகளை போன்களில் இருந்து நீக்குங்கள் என்று அந்த பகிர்வுகள் வலியுறுத்துகின்றன இதனைத் தொடர்ந்து சீன செயலிகளை ஸ்மார்ட் போன்களில் இருந்து நீக்குவதற்கு ஆகவே உருவாக்கப்பட்ட remove china 11app கூகுள் பிளே ஸ்டோரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆல் டவுன்லோட் செய்யப்பட்டது இந்த செயலில் ஒரு எனது போனில் உள்ள அனைத்து சீன செயலிகளையும் அன்இன்ஸ்டால் செய்து விடும் எனவும் கூறப்பட்டது ஆனால் கட்டுப்பாட்டு
விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக கூறி மே 3 ஆம் தேதியன்று இந்த செயலியை கூகுள் தடை செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன இதுதவிர டிக் டாக் பப்ஜி கேம் ஸ்கேனர் கிளாஷ் ஆப் கிளான்ஸ் லைட் மற்றும் யூசி ப்ரவுசர் போன்ற பல செயல்களுக்கு எதிராகவும் பலரும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர் ஆனால் வெறும் ஆப்புகளை மட்டும் நீக்கினால் இந்திய சந்தையில் சீன ஆதிக்கத்தை குறைக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர் எடுத்துக்காட்டுக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்தை எடுத்துக் கொள்வோம் உலக
அளவில் இந்த மருந்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருந்தாலும் இந்த மருந்து தயாரிக்க தேவையான முக்கிய மூலக்கூறுகள் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன அதேபோல குரோசின் மாத்திரை மூலக்கூறுகளும் சீனாவிலிருந்து வருகின்றன இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான 70 சதவிகித மூலக்கூறுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக இந்திய அரசின் தரவுகள் கூறுகின்றன சீனாவின் மூலப்பொருட்கள் விலை குறைவாக இருப்பதால் இந்திய நிறுவனங்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் வெறும் மருந்துகள்
மட்டுமல்லாமல் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீன பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் சீன தயாரிப்புகள் என்பது நமக்கே தெரியாது இந்தியாவின் பல நிறுவனங்களில் 2.34 பில்லியன் டாலர்கள் அளவுக்கு சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாக இந்திய அரசின் தரவுத்தளம் கூறும் நிலையில் மும்பையைச் சேர்ந்த தனியார் தந்தை மதிப்பீட்டு நிறுவனம் இதன் மதிப்பு 4 பில்லியன் டாலர்களை கடந்து விட்டதாக கூறுகிறது ஒரு மில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களை
யூனிகான் நிறுவனங்கள் என்று அழைப்பார்கள் அப்படி இந்தியாவில் யூனிகான் அந்தஸ்து பெற்ற 30 இந்திய நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சீனாதான் அதிக பங்குகளை வைத்துள்ளது இதில் பேடியம் கோலா பாஸ்கர் பைஜூஸ் மேக் மை ட்ரிப் ஆகிய நிறுவனங்களும் அடக்கம் குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் இந்தியா முக்கிய சந்தையாக இருப்பதால் அதில் சீன முதலீடு அதிகமாகவே காணப்படுகிறது எடுத்துக்காட்டுக்கு சீனாவைச் சேர்ந்த டிக் டாக் செயலி இந்தியாவில் யூடியூப் ஐ விட பிரபலம ாகி உள்ளதாக கேட்மே ஹவுஸ் என்ற சிந்தனையாளர் குழு
கூறுகிறது சீன முதலீடுகள் அதிகரிப்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தாலும் சமீபத்தில்தான் இந்தியா விழித்துக் கொண்டது இதனை தொடர்ந்து அன்னிய நேரடி முதலீடு செய்யும் நாடுகள் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகளாக இருந்தால் அவை முதலீடு செய்யும் முன்னதாகவே அரசிடம் அனுமதி பெற வேண்டும் என புதிய விதிமுறையை சமீபத்தில் இந்தியா கொண்டு வந்துள்ளது இந்த புதிய விதிமுறை பல சீன முதலீட்டாளர்களை வருத்தம் கொள்ள செய்தாலும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் செய்யப்பட்ட சீன முதலீடுகளில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது
இந்தியாவுக்கு சீனா தேவை என்பதை விட சீனாவுக்கு இந்தியா அதிகம் தேவை ஏனெனில் இரு தரப்பு வர்த்தகத்தில் ஒரு சமநிலையற்ற சூழல் உள்ளது இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அதிகம் பலனடைவது இந்தியாதான் ஏனெனில் குறைந்த விலையில் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதால் அதிக அளவில் அன்னியச் செலாவணியை இந்தியா மிச்சம் செய்து கொள்கிறது என சீனாவின் சிசுவான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கூறுகிறார் 2019 ஆம் ஆண்டில் மட்டும் சீனாவின் மொத்த ஏற்றுமதியில் 3 சதவிகி தம் இந்தியாவுக்குத்தான் செய்யப்பட்டுள்ளது என
விளங்கும் இத்தலம் ஒரு கட்டுரையில் தெரிவிக்கின்றது அதேபோல இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 5.3 சதவிகிதம் அளவு சீனாவுக்கு செய்யப்படுவதாகவும் அந்த கட்டுரை தெரிவிக்கிறது அப்படி என்றால் வியாபார உறவுகளை முறித்துக் கொள்வது இரு தரப்புக்குமே நஷ்டம் என்பதால் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான் இந்தியாவில் சீன நிறுவனங்கள் செயல்படுகிறதோ அதே போல இந்திய நிறுவனங்களான டாக்டர் எட்டில் ஆபீஸ் மகேந்திரன் மகேந்திரா சுந்தரம் பாஸ்பரஸ் ஆகிய நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகள் நடத்தி வருவதை நாம் மறந்துவிடக்கூடாது தற்போது சமூக
வலைத்தளங்களில் நடைபெற்று வரும் சீனாவுக்கு எதிரான பிரச்சாரங்கள் அந்த நேரத்து உணர்ச்சிகரமான சூழலால் ஏற்படுபவை அது குறுகிய காலமே நீடிக்கும் எனவே இது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை பாதிக்காது என சர்வதேச விவகாரங்கள் குறித்த நிபுணரான மகாஜன் பாபு கூறுகிறார் அதேபோல இந்த பிரச்சனைக்கெல்லாம் மூலகாரணமான எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அழுத்திக் கூறுகிறார் உண்மையில் இந்தியாவும் சரி
சீனாவு ம் சரி வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ள தற்போதைக்கு தயாராக இல்லை என்பதே நடைமுறை சூழலாக இருக்கிறது
