இந்தியாவுக்கும் நேபாளத்திற்கு இடையிலான நட்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆனால் அந்த நட்பில் தற்போது மிகப் பெரிய விரிசல் விழுந்துள்ளது எப்போதுமே இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் நேபாளம் கடந்த சில காலமாக சீனா பக்கம் சாய்வது போல தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர் ஒருவேளை இது உண்மை என்றால் இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் நேபாளம் சீனா வுக்கு ஆதரவாக திரும்பினால் இந்தியாவுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படலாம் என்பன குறித்து இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்கலாம் வணக்கம் என் பெயர் செந்தில்குமார் என கடந்த வாரம் நேபாள பிரதமர் மோடி கூறிய கருத்து தான் இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனையின் தொடக்கப்புள்ளி என
பலரும் கருதுகின்றனர் ஆனால் உண்மையில் இதற்கு முன்னதாகவே இரு நாடுகளுக்கும் இடையிலான உரசல் தொடங்கிவிட்டது கடந்த ஆண்டு இந்திய கைக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதிக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த இந்திய அரசு அது தொடர்பான புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது அந்த வரைபடத்தில் காலாபாணி என்ற பகுதி இந்திய எல்லைக்குள் இடம்பெற்றிருந்தது ஆனால் இந்த பகுதி தங்கள் நாட்டுக்கு சொந்தமான து என கூறி அப்போதே நேபாளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது இதனால் இந்தியாவுக்கு எதிராக ஏதாவது செய்தால் மட்டுமே தன் நாட்டு மக்களின் கோபத்தை தணிக்க முடியும் என்ற நிலைக்கு நேபாள அரசு வந்தது அதற்கான சந்தர்ப்பத்தையும் அந்த நாடு எதிர்பார்த்து காத்திருந்தது சமீபத்தில் சீன கட்டுப்பாட்டிலுள்ள
தீபத்தில் அமைந்துள்ள இந்துக்களின் முக்கிய புனிதத் தலமாக கருதப்படும் மானசரோவருக்கு செல்ல இந்தியா 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்புச் சாலை ஒன்றை அமைத்தது இந்த சாலை ஆனது உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து தீபக் இந்திய எல்லைகளைப் பிரிக்கும் லிபிக் பள்ளத்தாக்கு வரை அமைக்கப்பட்டது இந்த பகுதிக்கு அருகில் தான் நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது மூன்று நாடுகளின் எல்லைகள் பகுதியில் அமைந்துள்ளதால் இந்த பகுதியை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது கடந்த மே 7-ஆம் தேதி லீக் சாலையை வாகன பயன்பாட்டுக்கு இந்திய அந்த சாலை பணிகள் தொடங்கிய காலத்திலிருந்தே முணுமுணுத்து வந்த நேபாளம் சாலை திறக்கப்பட்டதும் இந்த சாலை தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதி வழியாக
அமைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து இதற்கு உடனடியாக இந்தியா மறுப்பு தெரிவித்தது இதோடு பிரச்சனை முடிந்தது என அனைவரும் இணைத்து இருக்கும்போதுதான் கடந்த மே 20ஆம் தேதி நேபாளம் தங்கள் நாட்டின் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது அதில் காலாபாணி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளை எல்லாம் தனது வரைபடத்தில் நேபாளம் இணைத்திருந்தது இந்த மூன்று பகுதிகள் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது என இந்தியாவும் நேபாளத்தின் மேற்கு மாகாணத்தில் உள்ளது என நேபாளமும் பல ஆண்டுகளாக கோரி வருகின்றன இதனைத் தொடர்ந்துதான் இந்தியா நேபாளம் இடையிலான பிரச்சனை உச்சகட்டத்தை அடைய தொடங்கியது நேபாள பிரதமர் ஆக இருக்கும் கேபி சர்மா ஒளி 1990
ஆம் ஆண்டுகளிலேயே நேபாளத்தில் அமைச்சராக பதவி வகித்தவர் 2007ஆம் ஆண்டுவரை நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் இந்த காலகட்டத்தில் அவர் இந்தியாவோடு நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் சமீப காலமாக சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள அவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது சீனாவுடனான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இந்தியாவை சார்ந்து இருப்பதை குறைத்துக் கொள்வது குறித்தும் பலமுறை பேசியிருக்கிறார் எனவே லீவுல பிரச்சனை அவரின் சீன சார்பு பிரச்சாரத்தை செயல்படு த்த ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது இதன் காரணமாக அன்றைய
காலகட்டத்தில் நேபாளத்தின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது இந்த நிலையில் நிலநடுக்கம் நிகழ்ந்து நான்கு மாதங்கள் கழித்து எந்த காரணமும் இல்லாமல் நேபாளத்தில் உள்ளன தனது எல்லையை இந்தியா முடியாது இப்படி ஆறு மாதங்கள் தொடர்ந்து இந்தியா தனது எல்லையை மூடி வைத்து இருந்ததால் பெட்ரோல் போன்ற பொருட்கள் கிடைக்காமல் நேபாளம் அந்த சமயத்தில் ஒளி தலைமையிலான ஆளும் கட்சி இந்தியாவுக்கு முன் பணிவாக செல்ல விரும்பவில்லை அதற்கு பதில் அனைத்து பொருட்களுக்கும் சீனாவை நாடுவது நல்லது என நினைத்து இதனை தொடர்ந்து சீனாவுடன் வணிக ஒப்பந்தம் ஒன்றையும் நேபாளம் செய்துகொண்டது இதனைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட ஒளி
அந்நாட்டுடன் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 8 ஒப்பந்தங்களை செய்து கொண்டார் இது இந்தியாவுக்கு அப்போது பெரும் அதிர்ச்சியை அளித்தது மட்டுமல்லாமல் இந்தியாவின் சில கட்டுப்பாடுகளில் மீதும் அந்த நாட்டையே சார்ந்திருப்பது மீதும் நேபாளத்திற்கு தொடர்ந்து விருப் பம் இல்லாமல் இருந்து வந்தது இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து தான் இந்த விவகாரத்தை முக்கிய பிரச்சனையாக நேபாளம் முன்வைப்பதாக பார்க்கப்படுகிறது கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த அப்போதைய நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா பிரச்சினையை அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயிடம் எழுப்பினார் வாஜ்பாயும் இது குறித்து கவனம் செலுத்துவதாக தெரிவித்தார் ஆனால் அடுத்த கட்டமாக குறித்து எந்த
பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை பின்னர் 2014ஆம் ஆண்டு இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இரு நாடுகளும் முடிவெடுத்தன ஆனால் அந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை பிரச்சனை குறித்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவது தான் ஒரே வழி என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர் ஏற்கனவே 2000 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த முடிவு எடுக்கப்பட்டது தவிர அவை நடைபெறவில்லை தற்போதும் கூட covid-19 பொது முடக்கம் காரணமாக இந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா ஒத்திவைத்துள்ளது ஆனால் மிகப் பெரிய பலம் வாய்ந்த நாடாக இந்தியா இருப்பதால் அது தான் இந்த பேச்சுவார்த்தையை முதலில் முன்னெடுக்க வேண்டும் எனவும்
கூறுகின்றனர் 2019ஆம் ஆண்டு இந்தியா புதிய வரைபடத்தை வெளியிட்டபோது நேபாளம்-இந்தியாவில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது ஆனால் அப்போது இந்தியா அதுகுறித்து கண்டுகொள்ளவில்லை ஒருவேளை அப்போதே இந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருந்தால் தற்போது இவ்வளவு பெரிய சர்ச்சைகள் ஏற்பட்டிருக்காது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர் ஒருவேளை இந்தியா மீண்டும் நேபாள பிரச்சனையில் அலட்சியமாக நடந்து கொண்டால் அது சீனாவுக்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன இது நேபாளத்தின் மீதான சீனாவின்
ஆதிக்கத்தை அதிகரிக்க வழி ஏற்படுத்துவது மட்டுமின்றி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இமயமலைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான புதிய பிரச்சினைகளையும் ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்